Monday, 3 February 2025

கரூர் மாவட்ட எம் பி ஜோதிமணி அவர்களை வரவேற்றபோது

*சிறுத்தைகள் கொடுத்த வரவேற்பு*

 கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் *ஜோதிமணி* அவர்கள்

 வெற்றி அடையச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்

 அரவக்குறிச்சி தொகுதி உட்பட பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்தார்கள்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 

 _விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தோழர்கள்_ 
சேக்ஃபரீத் சண்முகம் மகளிர் அணி உட்பட சிறுத்தைகள் பலர்

 புடை சூழ வரவேற்று மகிழ்ந்தோம்

 _எளிமையான பாராளுமன்ற உறுப்பினர்
 நம் பகுதிக்கு கிடைத்தது

 கரூர் மா நகருக்கு கிடைத்த பெருமையே 

இரண்டாவது முறையாக நின்று

 முன்பை விட அதிக வாக்கு பெற்றதும்

 காங்கிரஸ் பேரியகத்தின் இமாலய சாதனையே

 சில  முகங்களை பார்க்க முடியவில்லை வருத்தப்பட யாரும் தயாரில்லை

ஆனாலும் பாரபட்சமில்லாமல்

 அழைத்தவர்கள் வீட்டிற்கு எல்லாம் சென்று மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள்

 சில இடத்தில் தானே இறங்கி வந்து

 மக்களை சந்தித்து வெற்றியின் மகிழ்ச்சியை ரசித்தார்கள்

சால்வை அணிவித்து ஒதுங்கி நின்று என்னையும் 

வலம்வரும் வாகனத்தில் ஏற அழைத்த போது 

கூட்டணி கட்சிக்கு கிடைத்த கிடைத்த மரியாதை கண்டு மெய் சிலிர்த்தேன் 

சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் பலருக்கும் மகிழ்ச்சியே

சந்தர்ப்பம் கிடைத்த போது

 பாதிக்கப்பட்ட பட்டாணி தெரு மக்களின் பிரச்சினை கவனத்திற்கு கொண்டு வந்தேன் 

தொகுதிக்கு வேண்டியதை பலதையும் நினைவு படுத்த

 தன்னால் முடிந்ததை செய்து காட்டுகிறேன் என்று 

நம்பகம் தெரிவித்தார்கள்

ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் கரூர் மாவட்டம்

No comments:

Post a Comment