**கரூர் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா*
*
பள்ளப்பட்டி பட்டாணி தெருவில்
40 ஆண்டுகளாக குடியிருந்து வந்த பொது மக்களின் வீடுகளை
_2007 ஆம் ஆண்டு பள்ளப்பட்டி பஞ்சாயத்து_
முன் அறிவிப்பு இன்றி அப்போது சேர்மனாக இருந்த தோட்டம் பசிர் அவர்கள் தலைமையில்
350 க்கு மேற்பட்ட வீடுகள் இடித்து தரை தரைமட்டமாக்கப்பட்டன
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவ்வப்போது வருகை தரும் அமைச்சரிடமும்
முதல்வர் குறைதீர்க்கும் முகாமிலும் மனு கொடுத்து அவர்களுக்கு
இதுநாள் வரைக்கும் எவ்வித நிவாரணமும், மாற்று இடமும் வழங்கப்படவில்லை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 15 ஆண்டுகளாக
அம்மமக்களுக்கு மாற்று இடம் கேட்டு
உண்ணாவிரதம் முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி இருக்கின்றன
சில மக்கள் இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள்
ஒரு சிலர் தங்கள் தனது வருமானத்தின் மூலம் சொந்த வீடு கட்டி விட்டார்கள்
நூற்றுக்கு மேற்பட்ட
சில குடும்பங்கள் அன்றாடம் காட்சிகளாக
வாடகை கொடுத்து வாழ வழியில்லாமலும்
வேறு வழி இன்றி பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்
ஆறு மாதங்களுக்கு முன்பு எழுச்சித் தமிழர்கள் திருமாவளவன் அவர்களை சந்தித்து
அவர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்
மாவட்ட ஆட்சியர் அவர்களும் நான் பொறுப்பேற்று 10 தினங்கள் தான் ஆகிறது
என்னவென்று பார்க்கிறேன் என்று சொன்னார்கள்
எழுச்சித் தமிழரிடம் கடிதம் பெற்று வந்து
மாவட்ட ஆட்சியரை சந்தித்து எழுச்சித் தமிழரின் கடிதத்தையும்
அதற்கான பட்டியலையும் கொடுத்தேன்
6 மாதங்கள் ஆகியும் இதுவரையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை
ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள்
குறிப்பிட்ட நாளில்
வட்டாட்சியர் சந்திப்போம் நமக்கு சரியான முடிவு கிடைக்கவில்லை என்றால்
மக்கள் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல
அடையாள உண்ணாவிரதம்
அல்லது வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
இறுதி கட்டமாய் நடத்துவோம் என முடிவு செய்யப்பட்டது
சர்வே எண் 527, 528 120 சென்ட் இடம் நத்தம் புறம்போக்கு இருக்கிறது
அரசு தாமதிக்காமல் இந்த இடத்திற்கு பட்டா வழங்கலாம்
அதனை கூட பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு கொடுத்து உதவ
மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்
17 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும் இதுவரையும் தீர்வு கிடைக்கவில்லை
Spcid தோழர் ஜெர்னால்டு அவர்கள் தொடர்புகொண்டு
ஏற்கனவே பட்டாணித்தெரு மக்களுக்கு இடம் வழங்கி விட்தாமே என தொலை பேசியில் கேட்க
இவ்வாறாகத்தான் இப் பிரச்சனை திசை திருப்பப்பட்டு கொண்டிருக்கிறது என தெரிய வந்தது
நிகழ்ச்சி முடித்து வரும் போது
தோழர் சண்முகத்திடம்
*எல்லாம் செட்டப்பா*
என அவர் கேட்டது மீண்டும் எங்களுக்கு சந்தேகத்தை வலுத்தது
இனியும் தாமதித்தால் தீர்வு கிடைக்கும் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி
தொடர் முழக்கப் போராட்டத்தை கையில் எடுக்கும்
என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அடித்தட்டு மக்கள் நிலை மாற வேண்டும்
அதற்கு அரசியல் அதிகாரம் கை மாற வேண்டும்
என்றும் எழுச்சித்தமிழர் பாதையில்
ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
கரூர் மேற்கு மாவட்டம்
No comments:
Post a Comment