Monday, 3 February 2025

சைலேந்திரபாபு IPS வரவேற்றபோது

*PEC பெருமை மிகு சாதனை*

பள்ளப்பட்டி எக்னாமிக் சேம்பர் (PEC) யின் 

அடுத்த சாதனையாக

 *சைலேந்திரபாபு IPS*

 அவர்களை அழைத்து வந்து கௌரவித்தனர்

இதுபோன்று உயர் பதவிகளுக்கு நம் மாணவர்களும்  வர வேண்டும் என 

உயரிய நோக்கத்தோடு 

பல திருமணங்களை ஒரே மேடையில் நடத்தப்படும் 

ஹபீப் ஷாதி மகாலில் வரவழைத்து சிறந்த வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்

சாதனைகள் படைத்த _கிரசண்ட் பள்ளி & ஆக்ஸ்போர்டு பள்ளி முதல் உஸ்வத்துன் ஹசனா இண்டர்நேஷல் பள்ளி மாணவர்கள் வரை_

 *IPS* அவர்களோடு கை குலுக்கி ஆனந்தம் அடைந்தனர்

மாணவர்கள் கவனத்திற்கு வராத பல்வேறு படிப்புகளை 

நினைவில் நிற்கும் அளவிற்கு அழகாய் பாடமெடுத்தார்

உடலிற்கு மருத்துவம் தந்த PEC   நிறுவனம் 

உயர்விற்கும் உணர்விற்கும் மருந்தாய் அமையும் விதத்தில் 

IPS சைலேந்திரபாபு அவர்களின் வருகை அமைந்திருந்தது

சிறப்பு விருந்தினர் *IPS* கையால் பலருக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்
 
ஆட்டோ விளம்பரம் கேட்டு நானும் வரவேற்க சென்றேன் உடன் ஈரோட்டாம் அபூதாஹிர் அவர்கள்

நமது இமாம் அபுஹனிபா டிரஸ்ட் சார்பில் 

நினைவு பரிசு ஒன்றை அவருக்குத்தர

 கணப்பொழுதில் முடிவெடுத்தோம்

கடலை மடக்கி கை குட்டையாய் தர ஆசைதான்

மலையை மடக்கி மாலையாய் போடவும் ஆசைதான் 

வாய்ப்புகள் வசதியாய் அமையாது என முடிவெடுத்து 

 *ஹோலி குர்ஆன் தமிழ் தர்ஜுமாவை* 

அன்பளிப்பாய் கொடுத்து வந்தோம்

அன்பாய் பெற்றுக்கொண்டார் 

இதைவிட சிறந்தது வேறென்ன தந்துவிட முடியும்

பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவர் முணவர்ஜான் உட்பட 

PEC நிர்வாகிகள் பலரும் மேடையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தனர்

நமது அன்பளிப்பை புன் சிரிப்பால் ஆமோதித்தனர் 

அனுமதித்தற்கு நன்றி சொல்லி நகன்றோம் 

PEC யின் சேவையை அல்லாஹ் பொருந்திக் கொல்வானாக

ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி 

இமாம் அபுஹனிபா (ரஹ்) டிரஸ்ட்

பள்ளப்பட்டி கரூர் மாவட்டம்

No comments:

Post a Comment