Monday, 3 February 2025

தமிழக அரசின் பொங்கல் பரிசு நானும் வாங்கி வந்தேன்

*தமிழக அரசின் பொங்கல் பரிசு*  நானும் வாங்கி வந்தேன் தமிழக அரசின் பொங்கல் பரிசை நானும் வாங்கி வந்தேன்ஆளுயர கரும்பையும் பொங்கும் அரிசியும் நானும் வாங்கி வந்தேன்பாதி கரும்பை வரியாக தர வேண்டுமோ என்ற பயம் இல்லாமல் முழு கரும்பாய் வாங்கி வந்தேன்நெருக்கடி இல்லாமல் அடிபிடி சண்டை இல்லாமல்  மக்களோடு மக்களாக நின்று பொங்கள் பரிசை வாங்கி வந்தேன்பொங்கல் பணம் 1000 எங்கே என சிலர் அங்களாய்கிறார்கள்வீடியோக்களை வைரலாக்கி சுகம் பெறுகிறார்கள்மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் இல்லம் தேடி வருவதை மறந்தவர்கள் செய்யும் தவறு இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் தமிழக அரசு ஏறக்குறைய 7 கோடி மக்களுக்கு பல சலுகைகள் அள்ளித் தருவதை கண்டும் காணாமல் போகும் சிலரின் புலம்பல் தமிழக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில்பெற்றுக் கொண்ட மத்திய அரசு பேரிடர் காலத்தில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டும்  நையா பைசா வழங்காமல் தமிழகத்தை சோதனை பொருளாக்கி தமிழகத்தை  நிர்மூலமாக்க  தமிழர்களையே பயன்படுத்தி ஆயிரம் நிர்மலாக்கள் வந்தாலும் எம்மை நிர்பந்தப்படுத்த முடியாது என திராவிட மாடலை தொடரும் மக்கள் ஆட்சியில் மகிழ்ச்சியில் பொங்கட்டும்இரு பெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு திராவிடம் அழிந்து போகும் சனாதனம் தலை தூக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு சவுக்கடியை கொடுக்கும் விதமாக தனக்குத்தானே சவுக்கடி அடித்துக் கொண்டு அடையாளப்படுத்திய இந்த நேரத்தில் திராவிட மாடல் தழைத்தோங்கும் விதமாக தமிழர்களின் குடும்பத்தில் உங்களோடு பொங்கலாய் மகிழ்ச்சியும் பொங்கட்டும் சாதி விஷம் கலந்துசமத்துவ பெரியாரின் தான் மானத்தை சீரழித்து நாடாள துடிக்கும் நயவஞ்சகர்களின் சதிகள் முறியடித்து சமய சார்பற்ற தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும்திராவிட மாடல் பொங்களாய் தமிழர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும் _பெரியாரை_ உயர்த்தி பிடித்து அரசியல் அரங்கில் நாடகம் நடித்து அவரை அசிங்கப்படுத்த காரணம் தேடிக் கொண்டிருக்கும் நாதாரிகளின் சூழ்ச்சி பொங்கும் பானையின் அடி நெருப்பாய் கருகட்டும் _பொங்கல் பானை_ பிடிக்காத கரம் உண்டா பானையை விரும்பாத மனம் உண்டா  இந்த திருநாளில் *எழுச்சிகரமான பானையாய்* மகிழ்ச்சிகரமான செய்தியாய் _விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு_ *பானை சின்னம்* அங்கீகாரம்  கிடைத்திருக்கிறது அதனை உயர்த்திப் பிடித்து பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்சிறுத்தைகளின் ஆட்சி மலரட்டும் திராவிட மாடல் தொடரட்டும்அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்ஆலிம் Ln அ ரிபாய்தீன் ஹசனி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கரூர் மாவட்டம்

No comments:

Post a Comment