உலக கல்வியும்,மார்க்க கல்வியும் இணைந்து போதிக்கும் தன் கல்வி பணியில் 16 ஆம் ஆண்டை நோக்கி...
Wednesday, 13 November 2019
Monday, 4 November 2019
Saturday, 9 February 2019
என்னை அடையாளம் கண்டவரில் இவரும்ஒருவர்........ சின்னாரத்த நம்பியூர் CM முஸ்தாக் அலி அவர்களின் துயரச்செய்தி என்னை நிலைகுலையச் செய்து விட்டது கோபி இந்தியா சில்க்ஸ் ல் பணிபுரியும் காலம்தொட்டே (2000) நட்புறவை வளர்த்துக் கொண்டவர் பழக்கத்தில் எளிமையானவர் தப்பிப்பிறந்தவர் என பலமுறை சொல்லி வியந்திருக்கிறேன் தன்மானம் மேலிட சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்தவர் கடும் உழைப்பால் உயர்ந்தவர் எனது வெளிநாட்டு வாய்ப்பெல்லாம் தட்டிக்கழித்து படிப்புடன் மார்க்க கல்வி மாணவர்களுக்கு தரவேண்டுமென்ற நோக்கில் நான்... எனது முதன் முயற்சி கல்லிடைக்குறிச்சி யில் தோல்வியடைந்த போது ஆசிரியர் வழிகாட்டில் கோபி சென்றேன் அங்கு நிர்வாக குழப்பத்தால் என் முயற்சி கேள்விக் குறியானபோது கணபதிப்பாளையத்தில் 1500 சம்பளத்தில் தற்காலிக இமாமத் பணியில் சேர்ந்த போது டீத்தூள் தொழிலை அறிமுகப் படுத்தி ,செய்ய வைத்தவர் சின்னாரத்த CM முஸ்தாக் அலி அவர்கள் என் வாழ்வு கிராமத்திலே மூழ்கிவிடுமோ பயந்து என் இலட்சிய சிந்தனையை நம்பியூர் சின்னாரத்த CM முஸ்தாகிடம் தெரிவித்ததும் என் மாமியார் வீடு பராமரிப்பின்றி உள்ளது. அதில் தங்களின் மத்ரசா பணியை தொடருகின்றீர்களா என்றதும் தாமதம் உடனே பள்ளப்பட்டி வந்து பார்வையிட்டு ஆசிரியப் பெருந்தகையிடம் ஆலோசனை பெற்று சின்னாரத்த CM முஸ்தாக் அலி அவர்களின் ஒத்துழைப்போடு 2002 ல் பள்ளப்பட்டி யில் துவக்கப்பட்டது இமாம் அபுஹனிபா மத்ரசா அல்ஹம்துலில்லாஹ் இன்று வரை அல்லாஹ்வின் உதவியால் சான்றோர்களின் து. ஆ பரக்கத்தால் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது இன்று அவரின் ஜனாசா தொழுகையில் கலந்துகொள்ள முடியாத தூரத்தில் இருப்பதுதான் பெரும்கவலை மூன்றாம் முயற்ச்சியாய் பள்ளப்பட்டி யில் மத்ரசா துவங்க முதல் அச்சாரமிட்டவர் சின்னாரத்த CM முஸ்தாக் அலி அவர்கள்தான் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னித்து மண்ணரையை பிரகாசமாக வெளிச்சமாக சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்கித்தருவானாக இழந்து வாடும் சந்ததிகளுக்கும் நண்பர்களுக்கும் சமாதானத்தையும் அழகிய பெருமையையும் தந்தருள்வானாக ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி ட்ரஸ்டி இமாம் அபுஹனிபா மத்ரசா பள்ளப்பட்டி கரூர்
என்னை அடையாளம் கண்டவரில் இவரும்ஒருவர்........
சின்னாரத்த நம்பியூர் CM முஸ்தாக் அலி அவர்களின் துயரச்செய்தி
என்னை நிலைகுலையச் செய்து விட்டது
கோபி இந்தியா சில்க்ஸ் ல் பணிபுரியும் காலம்தொட்டே (2000) நட்புறவை வளர்த்துக் கொண்டவர்
பழக்கத்தில் எளிமையானவர்
தப்பிப்பிறந்தவர் என பலமுறை சொல்லி வியந்திருக்கிறேன்
தன்மானம் மேலிட சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்தவர் கடும் உழைப்பால் உயர்ந்தவர்
எனது வெளிநாட்டு வாய்ப்பெல்லாம் தட்டிக்கழித்து படிப்புடன் மார்க்க கல்வி மாணவர்களுக்கு தரவேண்டுமென்ற நோக்கில் நான்...
எனது முதன் முயற்சி கல்லிடைக்குறிச்சி யில் தோல்வியடைந்த போது ஆசிரியர் வழிகாட்டில் கோபி சென்றேன் அங்கு
நிர்வாக குழப்பத்தால் என் முயற்சி கேள்விக் குறியானபோது
கணபதிப்பாளையத்தில் 1500 சம்பளத்தில் தற்காலிக இமாமத் பணியில் சேர்ந்த போது
டீத்தூள் தொழிலை அறிமுகப் படுத்தி ,செய்ய வைத்தவர் சின்னாரத்த CM முஸ்தாக் அலி அவர்கள்
என் வாழ்வு கிராமத்திலே மூழ்கிவிடுமோ பயந்து என் இலட்சிய சிந்தனையை
நம்பியூர் சின்னாரத்த CM முஸ்தாகிடம் தெரிவித்ததும்
என் மாமியார் வீடு பராமரிப்பின்றி உள்ளது. அதில் தங்களின் மத்ரசா பணியை தொடருகின்றீர்களா என்றதும் தாமதம்
உடனே பள்ளப்பட்டி வந்து பார்வையிட்டு ஆசிரியப் பெருந்தகையிடம் ஆலோசனை பெற்று
சின்னாரத்த CM முஸ்தாக் அலி அவர்களின் ஒத்துழைப்போடு
2002 ல் பள்ளப்பட்டி யில் துவக்கப்பட்டது
இமாம் அபுஹனிபா மத்ரசா
அல்ஹம்துலில்லாஹ் இன்று வரை அல்லாஹ்வின் உதவியால் சான்றோர்களின் து. ஆ பரக்கத்தால் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது
இன்று அவரின் ஜனாசா தொழுகையில்
கலந்துகொள்ள முடியாத தூரத்தில் இருப்பதுதான் பெரும்கவலை
மூன்றாம் முயற்ச்சியாய் பள்ளப்பட்டி யில் மத்ரசா துவங்க முதல் அச்சாரமிட்டவர்
சின்னாரத்த CM முஸ்தாக் அலி அவர்கள்தான்
அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னித்து மண்ணரையை பிரகாசமாக வெளிச்சமாக
சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்கித்தருவானாக
இழந்து வாடும் சந்ததிகளுக்கும் நண்பர்களுக்கும் சமாதானத்தையும் அழகிய பெருமையையும் தந்தருள்வானாக
ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி
ட்ரஸ்டி இமாம் அபுஹனிபா மத்ரசா பள்ளப்பட்டி கரூர்
Friday, 6 April 2018
இமாம் அபு ஹனிபா மத்ரசா 17 ம் ஆண்டு நிறைவு விழா& பாரதி பள்ளி 13 ம் ஆண்டு விழா

அல்ஹம்துலில்லாஹ்... நமது இமாம் அபுஹனிபா ரஹ் மத்ரசா மற்றும் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது புரவலர் மனித நேயர்,சமூக ஆர்வலர்,நாட்டாமை NMB காஜாமைதீன் அவர்கள் தலைமையில் கூலப்பா முஹம்மது அலி ஹாஜி அவர்கள் முன்னிலையில் வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பிரபு அவர்கள் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர் தலைமை ஓய்வு ஆசிரியர் உ மரியதாஸ் சமூக ஆர்வலர் H சேட் இஸ்மாயில் கலந்து கொண்டனர் மருத்துவர் தமீம் அவர்களும் புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரி பேராசிரியர்,செங்கல்பட்டு வட்டார ஜமா அத்துல் உலமா செயலாளர் அப்துல் ஹை ஹசனி நத்வி ஆகியோர் சிறப்புரை வழங்கினர் ஹசீனா தாஜ் நினைவு விருது சிறந்த முயற்ச்சியாளர் அப்துல் வஹ்ஹாப் இர்பான் அவர்களுக்கும் சிறந்த ஆசிரியர் விருது பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி பேராசிரியர் டாக்டர். ஷை ,இ அப்துஸ்ஸுக்கூர் அவர்களுக்கும் கூலச்சி முஹம்மது அலி ஹாஜி நினைவு விருது பொதுநல சேவைக்கான விருது பசுமை பள்ளப்பட்டி அவர்களுக்கும் சமூக ஆர்வலர் நோட்டம் அன்வர் அலி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் திருமிகு ச,சூர்யபிரகாஷ் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அவ்விருதுள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கியும் பேருரை நிகழ்த்தினார் பெற்றோர்களும் , மாணவர்களும் வருவாய் அலுவலர் பேச்சை ஆர்வமாய் ரசித்தார்கள் அரவை தாசிதார் பா சந்திரசேகர் மற்றும் துனை தாசில்தார் ராஜேந்தர் மற்றும் பள்ளப்பட்டி வருவாய் ஆய்வாளர் ரவி வர்மன் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் கராத்தே பயிற்சி வழங்கிய தோழர் ரவி நிசோக் ராஜா மாணவர்கள் மேடையிலேயே நிகழ்ச்சியை அழகுர செய்துகாட்டினார்கள் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் மௌலவி நிஃமத்துல்லா உடுமலை காதர் மௌலவி அல்தாப்ஹசினி திண்டுக்கல் தௌஃபீக் அப்துல் நாசர் பேராசிரியர் பாபு பேராசிரியர் இஹ்சான் பேராசிரியர் இஸ்மாயீல் பேராசிரியர் பொதிகை மைதீன் தோழர் ரவினாத் அப்துல்ஹமீத் ஹசனி காசிமி, ஒலிம்பிக் ஆப்டிக் பைசல் பிரைட் ஆப்டிக் சிந்தீக் ஆட்டோ நன்ப்ர் ஜமால் சேக் ஃபரீத் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்கள பள்ளி தாளாளர் ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி நன்றியுரை கூறினார் பேராசிரியர் சாஹுல் சதாம் இஞ்னியர் பாரூக் அதிமுக அமானுல்லா மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர். சும்ம அல்ஹம்துலில்லாஹ்
👉🏻IMAM ABU HANIFA MADRASA (Educational shariyath academy
A MADRASA (Educational shariyath academy)
Their living place,Medical fees,uniforms,subject books totaly offered for one student is monthly rs.4000/_
On taking intrest and care of social welfer,,with urs sacred heart make us dua to run properly and you can also help us by giving zakath (or) sadhakka
1 day ifthar food-Rs 2500/_)
Near masjidh muhmadhiya,ponna kavundanoor road,
Pallapatti,karur(dt)
-------- -------- ---- --------
Indian bank -pallapatti branch
Tuesday, 2 January 2018
எனது சிந்தனை
CMN சலீம் அவர்கள் பள்ளப்பட்டி வருகை
இன்று பள்ளப்பட்டி வருகைதந்த
C M N சலீம் அவர்களின் பேச்சை கேட்க சிந்தனையாளர்கள்
பலரும் வந்திருந்தார்கள்
ஏற்ப்பாடு செய்த ஐடியல் சொசைட்டி
மன்றத்தார்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
நானும் ஆவலாய் சென்றேன் 30 நிமிடம்தான் இருக்கமுடிந்தது
அவரை அழைத்துக்கொண்டு நமது இமாம் அபுஹனிபா ரஹ் மத்ரசா மற்றும்
பாரதி பள்ளி யை பார்வையிடவும் ஆலோசனை பெறவும் மனதிற்கு ஆவல் தான்
விடுமுறை ஆயிற்றே என அன
அங்கலாயித்து வந்துவிட்டேன்
17 வருடமாக இமாம் அபுஹனிபா மத்ரசாவின் நோக்கத்தை ஊர் ஊராய் அலைந்து பள்ளி படிப்புடன் மார்க்ககல்வி அவசியம் என் முயற்ச்சித்து சொன்னதை
கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் கி பி 1200
மற்றும் 1856 லிருந்து. 2018. வரை
இடைப்பட்ட கல்வி
மார்க்க அறிஞர்கள் உருவான உருவாக்கிய விதம் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி ஆரியர்களின் தந்திரம் நாம் அடைந்த தோல்வி என அழகாய் விவரித்தார்
மார்க்க அறிஞர் மருத்துவராக, சட்டமேதையாக ,ஆராய்ச்சியாளராக, அரசியல் வாதியாக,
ஆட்சியாளராக......
இருந்ததை அழகுர எடுத்துரைத்தார் அனைவரும் அமைதியாய் கேட்டனர்
இதே முயற்சியில் சிந்தனையில்
17 வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்
4 செல்வந்தர்கள் கவனத்திற்கு சென்றிருநதால்
அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பேன
சாட்சியாக இருப்பவர்களே விரோதமாய் இருந்தால்......
ஓ எனது பலஹீனமே.....
மேடையில் முழங்குபவர்கள் அருகில் இருப்பவர்களை அடையாளப்படுத்த யோசிக்கிறார்ளோ...
அரசியல் இவருக்கு தேவையா சிரமத்தில் ஏன் மத்ரசா நடத்த வேண்டும் என்று
என் சிந்தனையை அலட்ச்சியப்படுத்தும் கேள்விகள்..
ஆப்டிக்கல்ஸ் கண்கணாடிக்கடைகள் மட்டும் இல்லாதிருந்தால் என் நிலமை
அல்லாஹ் பாதுக்கிறான்
அன்றும் இன்றும் ஒரே சிந்தனையில்
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்
கல்விக்குழந்தைகள் ! அறிவுக் குழந்தைகள்!!
அனைத்து குழந்தைகளையும் ! கல்வியாளராக்குவோம் !!
என்ற சிந்தனையில் 2002 ல் நாம் நடக்கத்தொடங்கிய. பாதையிலிருந்து சற்றும் விலகாமல் பின்வாங்காமல்
2018 ஐ கடந்தும் அதே வீரியத்துடன் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து
ஆதரவற்ற குழந்தைகளின் அடைக்கலமாய்
இமாம் அபுஹனிபா மத்ரசா பள்ளப்பட்டி
பள்ளிக்கல்வியுடன் மார்க்கக்கல்வியும் போதித்து வருகிறது
ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி
து ஆ வை யும் தவா வையும்எதிர்பார்த்து
Tuesday, 13 June 2017
ஏழை மதரஸா மாணவர்களுக்கு உதவுங்கள்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்ணியமான ரமழானின் பரக்கத்தால் அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர் பதவி அளித்து நபிகளாரின் அருகில் அமர்ந்திருக்கும் பாக்கியத்தை தருவானாக.
நமது இமாம் அபுஹனிபா மதரஸா 16 ஆண்டுகளை தொடர்ந்து பள்ளி படிப்புடன் மார்க்க கல்வியும் போதித்து வருகிறது. இயன்ற மாணவர்கள் குறைந்த கட்டணமும் ஆதரவற்ற வசதியில்லாத சிறுவர்கள் இலவசமாகவும் பயின்று வருகிறார்கள்.
கட்டிட வேலை ஒருபகுதி நடந்து கொண்டிருக்க
மாணவர்களின் உணவு மருத்துவம் பராமரிப்பு செலவு ஒரு நாளைக்கு ரூபாய் 2000 வரை செலவாகிறது...
அல்ஹம்துலில்லாஹ்,,,
15 ஆண்டுகளாக நம் முயற்சி வீண் போகவில்லை அல்லாஹ் பெரிதும் உதவியாளனாக இருக்கிறான் .22 மாணவர்களை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு 15 மாணவர்கள் புதிய மாணவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
தற்காலத்திற்கேற்றவாரு ஈருலகத்திற்க்கும் ஏற்ற கல்வி கொடுத்து
வருங்காலத்தில் அரசு வழக்கறிஞர் ஆலிம்களாக,மருத்துவராக, ஹாஃபிழாக,
பொறியாளராக, மார்க்கம் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.
தங்களை போன்ற மார்க்கத்தின் மேல் பற்றுள்ளவர்கள்
தரும் சதகா ஜக்காத் நிதியுதவிகள் மூலம் தற்போது மதரஸா நடந்து வருகிறது
ஆகவே தங்களின் ஜக்காத் சதக்காக்களை இமாம் அபுஹனிபா (ரஹ்)
ட்ரஸ்ட் என்ற பெயரில் அனுப்பி கல்விக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பணம் அனுப்ப வேண்டிய முகவரி
Imam Abuhanifa (rah) Trust
Indian bank
Pallapatti branch
A/c No-60 48 05 1037
Ifsc No-idib ooo p 146
Canara bank
A/c No-16 92 10 100 8485
Ifsc No-cnrb 000 1692
தொடர்புக்கு
மௌலவி ஹாபிழ் ரிபாய்தீன் ஹசனி MA
91 50 56 0004